Loading...
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற COP 28 மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Loading...
இதேவேளை இங்கு காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் உலகளாவிய சவால் மற்றும் வெப்பவலயப் பிராந்தியத்தில் இலங்கையின் பங்களிப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் விவசாய துறையை நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும்
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் போது பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
Loading...