Loading...
கடந்த ஆண்டில் (2022) இலங்கையில் தனிநபர் மீன் நுகர்வு நாளொன்றுக்கு 31.3 கிராமாக 15 வீதத்தால் குறைந்துள்ளது.
இதேவேளை 2021 ஆம் ஆண்டில், இலங்கையின் தனிநபர் மீன் நுகர்வு ஒரு நாளைக்கு 36.7 கிராம் என அடையாளம் காணப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மீன் உற்பத்தி
கடந்த ஆண்டு (2022) இலங்கையின் மொத்த மீன் உற்பத்தி 2021 ஆம் ஆண்டை விட 30,935 மெட்ரிக் தொன்களால் குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மீன் உற்பத்தி 321,575 மெற்றிக் தொன்களாகவும், 2022 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தி 290,640 மெற்றிக் தொன்களாகவும் குறைந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
Loading...