வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் உறுதியான பதில் வழங்கும் வரை காலவரையரையின்றி இவர்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி என்று காட்டிக்கொள்ளும் அரசே எங்களின் நிலை என்ன?, மைத்திரியின் நல்லாட்சில் பட்டதாரிகளின் அவலம், பட்டதாரிகளின் எதிர்காலத்தை வீணடிக்காதே, பட்டதாரிகளை இனியும் ஏமாற்றாதே என்ற பதாகைகளை இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று காலை சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து பேசியுள்ளார்.