போலி வீசாக்களை பயன்படுத்தி கட்டார் டோஹா ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கட்டுநாயக்க புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நிட்டம்புவ, வத்துபிட்டியல பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 35 வயது எனவும் பெண்ணுக்கு 25 வயது எனவும் தெரியவந்துள்ளது.
போலி வீசா
இவர்கள் நேற்று அதிகாலை 03.25 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் தோஹா நோக்கிச் செல்லவிருந்தனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தரகர் ஒருவருக்கு தலா 40 இலட்சம் ரூபா 80 இலட்சம் ரூபா கொடுத்து இந்த இரண்டு விசாக்களையும் ஏற்பாடு செய்ததாக குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் கூறி, அவர் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதற்கமைய, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.