இஸ்ரேல் இராணுவத்தால் 60 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட கைதிகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட பலஸ்தீனர்கள் குழு பெத்லஹேமில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன கைதிகள் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
800க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த தாக்குதல்களில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் இதுவரை மொத்தமாக 15523 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காஸா பகுதியின் அனைத்து மாகாணங்களிலும் இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்துள்ளதுடன், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தேடும் நடவடிக்கை மேலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.