ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவினருக்கும் ஜனாதிபதியின் அணியினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும், ஜனாதிபதி அந்த கொள்கைகளில் இருந்து மாறுபட்ட பயணத்தை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரவு செலவுத்திட்டத்தை அதிகபட்சமாக தோற்கடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.
அதற்கமைய, எதிர்க்கட்சிகளின் துணையுடன் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.