Loading...
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (06.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
Loading...
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் திவாகர் (வயது 18) என்ற இளைஞனே வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...