Loading...
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ” மலையக அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக செயற்படும் எமது சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஜனாதிபதியால் இப்படியான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
Loading...
அவரால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு எனது அமைச்சு பக்கத்தில் இருந்து ஏதேனும் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...