Loading...
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியிலுள்ள மத்ரஸாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் கழுத்துப் பகுதி நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை நேற்று(07.12.2023) அம்பாறை பொது வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம வெளியிட்டுள்ளார்.
Loading...
தடுப்புக்காவல்
இந்நிலையில், இந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான மத்ரஸாவின் நிர்வாகி பொலிஸாரின் தடுப்புக்காவலில் உள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபர் இன்று(08.12.2023) கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Loading...