Loading...
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்படவுள்ளன.
Loading...
இந்த வழிகாட்டல்களில் பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம், உளநலம் பாதிக்கப்பட்ட நபரை வழிநடத்தும் விதம் மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வெளியிடப்படும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.
Loading...