Loading...
மாத்தறை கோட்டையில் மின்சார சபை ஊழியர்களினால் தோண்டப்பட்ட குழி ஒன்றில் காணப்பட்ட பொருட்கள் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் மின் கம்பம் நடுவதற்காக குழி தோண்டியபோது, மனித எலும்புகள், பீங்கான் பொருட்கள், புகை பிடிக்கும் இயந்திரம் மற்றும் சில மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றை மாத்தறை தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...