இலங்கையில் இந்நாட்களில் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, பல்வேறு சுவாச நோய்கள் மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பரவி வரும் சில சுவாச நோய் வைரஸ்களினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும், இருமலுடன் கூடிய டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டெங்கு நோய்
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மருத்துவர் ஆஷா சமரநாயக்க, டெங்கு நோயாளர்களுக்கு சிறிதளவு இருமல், தொண்டையில் அசௌகரியம், சில சமயங்களில் மூக்கில் சளியுடன் கூடிய அசௌகரியம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டெங்குவும் இருக்கலாம் என மருத்துவர் ஆஷா சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இரத்த பரிசோதனை
இந்நோய்களில் கவனம் செலுத்தாததால், பலரது குடும்பத்தினர் அனைவரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கு மூன்று நாட்களாக அதிக காய்ச்சல் இருந்தால், உடனடியாக முழு இரத்த எண்ணிக்கை மற்றும் NS1 ஆன்டிஜென் இரத்த பரிசோதனை செய்து நோயை கண்டறிய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.