Loading...
வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் குறுந்தகவல்களுக்கு வியூ ஒன்ஸ் முறையை வழங்கியிருந்தது.
தற்போது அதனை வாய்ஸ் நோட் முறைக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின் மூலம் வாய்ஸ் நோட்டை ஒரு முறை மட்டுமே கேட்க முடியும். நீங்கள் அனுப்பும் பயனாளர் கேட்டதும் சாட்டில் இருந்து மறைந்து விடும்.
Loading...
வாட்ஸ்அப் செயலியில் மற்ற மெசேஜ்களை போன்றே வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய அப்டேட்டை தற்போது பயனாளர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...