Loading...
அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இபலோகம, கலகரம்பேவ பிரதேசத்தில் வசிக்கும் அனுஹஸ் தினெல்க விரோச்சன என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரிய மொழி புலமைப் பரீட்சையில் தோல்வியடைந்தமையினால் இந்த இளைஞன் மனம் உடைந்து மிகவும் கவலையடைந்திருந்தமை தெரியவந்துள்ளது.
Loading...
பொலிஸார் சந்தேகம்
இதனால் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...