Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் தமிழ் இளைஞனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று இரவு 07.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-217 விமானத்தில் தோஹா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
Loading...
போலியான கடவுச்சீட்டில் பயணம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்த குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Loading...