விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று சட்டமூலங்களை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்ட ங்களில் திருத்தம் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விவாகரத்து கோரி தாக்கல் செய்பவரின் சுமை அதிகமாக உள்ளது என்றும் காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம் என்பதனால் சில விவாகரத்து வழக்குகள் 10-20 ஆண்டுகள் செலவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் விவாகரத்துகள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படும் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அவசர மற்றும் இடைக்கால நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சம்மன்களை வெவ்வேறு வழிகளில் வழங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
மேலும் இந்த சட்டம் கணவன் அல்லது மனைவி காணாமல் போயிருந்தால் விவாகரத்தை எளிதாக்கும், ஒரு திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டாலும், அத்தகைய திருமணத்தின் மூலம் உருவாகும் குழந்தைகளின் சட்டபூர்வமான தன்மை பாதுகாக்கப்படும்.