Loading...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி நாவற்காடு வீதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
இதன்போது ஒரு பவுண் காப்பும் அரைப் பவுண் மோதிரமும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...