Loading...
சுண்டைக்காயில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக நிறைந்துள்ளது.
Loading...
எனவே இந்த சுண்டைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்.
சுண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- அன்றாட உணவில் சுண்டைக்காயை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், நமது உடம்பின் ரத்தம் சுத்தமடைவதுடன் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.
- சுண்டைக்காயில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இது நமது உடல் வளர்ச்சியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உடற்சோர்வை போக்குகிறது.
- சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தங்களின் அன்றாட உணவில் அடிக்கடி சுண்டைக்காயை சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- உணவில் வாரத்திற்கு மூன்று முறை சுண்டைக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பூச்சிகள் வெளியேற்றப்பட்டு, அல்சர் மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனைகள் நீங்கும்.
- சுண்டைக்காயை முற்றியதாக இருந்தால், அதை மோரில் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பாக சாப்பிட்டு வந்தால், குடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவிடும்.
- சுண்டைக்காய் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், மார்புச்சளி, தொண்டைக்கட்டு ஆஸ்துமா, காசநோய் இது போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
- சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைப்பதால், குடலில் உள்ள புழுக்கள் இறப்பதுடன், சர்க்கரைநோயை கட்டுப்படுத்துகிறது.
Loading...