Loading...
நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலட நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதே இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
Loading...
சபை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பக்கம் இருந்து திடீரென கூச்சலிட்டவாறு இருவர் சபாநாயகரை நோக்கி சென்றதோடு இரு கண்ணீர் புகை குண்டுகளையும் எரிந்துள்ளனர்.
பின்னர் , உறுப்பினர்களால் அவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...