நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் அரசாங்கம் விமல் வீரவங்ச போன்ற தேசிய தலைவர்களை சிறை வைத்து தனது அதிகாரத்தை பாதுகாக்க நினைக்குமாயின் அது தவறு என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
விமலை உடனடியாக விடுதலை செய் என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து, வீழ்விட போகும் அதிகாரத்தை தக்காத்து கொள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை வேட்டையாடி வருகிறது.
நாட்டின் ஐக்கியத்திற்காகவும் அநீதிக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள் அரசாங்கம் வேட்டையாடி வருகிறது.
இதற்கு எதிராக நாங்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.வீரவங்ச என்பவர் நாட்டுக்காக முன்னின்று போரிட்ட தலைவர். இவர்களை சிறையில் அடைத்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க முடியாது.
உடனடியாக விமல் வீரவங்சவை விடுவிக்குமாறு கோருகிறோம்.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை அடக்கி தமது இயலாமையை மூடி மறைக்க முடியாது என்பதை மைத்திரி – ரணில் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.