ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லலாம் என்ற கோரிக்கையை சசிகலா மறுத்தார் என்று ஓ.பன்னீர்செல்வம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பசுமைவெளிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, கட்சியையும், ஆட்சியையும் உங்களால் தான் காப்பாற்ற முடியும் என்று சசிகலா கூறினார் என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மூத்த அரசியல் தலைவர் தம்பிதுரைக்கு, பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கான அணுகுமுறை குறித்து தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லலாம் என்ற கோரிக்கையை சசிகலா மறுத்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி உண்மையைக் கொண்டு வர வேண்டும்.
உண்ணாவிரதத்தின் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால், வேறு வழியில் போராட்டம் நடைபெறும் என்றார்.