Loading...
ராகமை – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Loading...
17 வயதுடைய சிறுவன்
காயமடைந்தவர்களில் 17 வயதுடைய சிறுவனும், பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...