ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை கூறிவிடலாம் இதோ!
ஞாயிற்றுக் கிழமை
ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதில் வென்று முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் மற்றவர்கள் கடினமாகச் செய்யும் செயல்களைக் கூட இவர்கள் எளிதில் செய்து முடிக்கும் ஆளுமைத் திறன் மிக்கவர்கள்.
திங்கள் கிழமை
திங்கள் கிழமை பிறந்தவர்கள், வசீகரமான தோற்றத்தாலும், நகைச்சுவைமிக்க பேச்சாலும் மற்றவர் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.
இவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுது போக்குவதில் தான் அதிக ஆர்வமாக இருப்பார்கள். உதவி என்று யார் வந்து கேட்டாலும், உடனே செய்து விடுவார்கள்.
செவ்வாய் கிழமை
செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள், வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இவர்களுடன் பேசும் போது மற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் அதிகமாக கோபம் கொள்வார்கள். இருந்தாலும் அதை அவர்களே உணர்ந்து புரிந்துக் கொள்ளும் குணங்களை கொண்டவர்கள்.
புதன் கிழமை
புதன் கிழமை பிறந்தவர்கள், எதையாவது எழுதுவது மற்றும் படிப்பது இது போன்ற இருப்பதில் அதிகம் ஆர்வம் உடையவர்கள். ஆனால் இவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத் தான் பழகுவார்கள். பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள்.
வியாழன்கிழமை
வியாழக் கிழமையில் பிறந்தவர்கள், தேவையில்லாத பிரச்னைகளில் அவ்வளவு எளிதாகச் சிக்க மாட்டார்கள். தன்னடக்கம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து விஷயத்தையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட எண்ணுவார்கள்.
வெள்ளிகிழமை
வெள்ளிக் கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள்.
சுற்றுலா பிரியர்களான இவர்கள், காலில் சக்கரம் கட்டாத குறையாக அலைந்து கொண்டிருப்பார்கள். ஆனால், இவரது உழைப்பு முழுவதும் மற்றவர்களுக்கே சென்று சேரும்.
சனிக் கிழமை
சனிக் கிழமையில் பிறந்தவர்கள், சோம்பலை தள்ளிப் போடுவதும் இவர்களின் பிறவிக்குணமாக இருக்கும். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள்.
இவர்கள் எந்த விஷயத்திலும் சரியாக ஃபாலோ பண்ணுவார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள்.