களனிப் பல்கலைக்கழகத்தில் மஹாபொல உதவித்தொகை பெரும் மாணவர்களுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தென்னிலங்கை பத்திரிக்கை ஒன்றுக்கு வழஙகிய செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
5000 ரூபாய் உதவித்தொகை
இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“பல ஆண்டுகளாக 5000 ரூபாய் உதவித்தொகை உயர்த்தப்படாமல் உள்ளதால், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இதுவரை உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. என்றார்.
உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு, மஹாபொல உதவித் தொகையான 5000 ரூபாயை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால் எதிர்காலத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும்” என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.