கனடாவில் புதிதாக வீடுகளை நிர்மானிப்பதற்காக காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டமொன்றை கனேடிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு பகுதி காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்
இந்நிலையில், பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடிய காணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயண தூரத்தில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது.
இதன்படி நகரின் சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் குறைந்த விலையில் காணிகள் வழங்கப்படும் என ஒன்றாரியோ மேயர் பீட்டர் பொலிடிஸ் குறிப்பிட்டுள்ளார்.