Loading...
இந்திய திரையுலகில் நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகி என பன்முகம் கொண்டு விளங்குபவர் ஸ்ருதி ஹாசன். அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் பிஸி நடிகையாக வலம்வருகிறார்.
முன்னர் இவர் சித்தார்த், ரைனா ஆகியோரை காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலை டேட் செய்து வருவதாக தகவல் வெளியானது.
Loading...
ஆனால் மீடியாவில் இதுகுறித்து கேட்டபோது ஸ்ருதி அதை மறுக்கவும் இல்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லண்டன் சென்ற கமல் ஹாசன், ஸ்ருதியின் காதலராக சொல்லப்படும் மைக்கேல் கார்சேலை சந்தித்து பேசியுள்ளார். இதைதொடர்ந்து இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என கிசுகிசுக்கப்படுகிறது.
Loading...