Loading...
கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை சற்று கன மழை பெய்துள்ளது, ஒரு சில மணித்தியாலயங்கள் பெய்த சற்று கன மழை காரணமாக வீதிகள் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது.
தற்போது கால போக நெல் அறுவடை முழுமையாக நிறைவுப் பெறாத நிலையில் மழை பெய்துவருவது விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாதநிலையிலும் அறுவடைக்கு தயாரான வயல்களை அறுவடை செய்ய முடியாத நிலையிலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எற்கனவே விதைப்பு காலங்களில் போதிய மழையின்மையால் பாதிப்புக்களை சுமந்த விவசாயிகள் தற்போது அறுவடை காலத்தில் பெய்யும் மழையினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
Loading...
Loading...