வவுனியாவில் இயங்கி வரும் தமிழ் சங்கம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் வவுனியா பிரதேசசெயலகத்தில் குறித்த விண்ணப்பமானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா தமிழ் சங்கம் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் விண்ணப்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, பதிவு செய்யப்பட்ட ஆண்டு, பதிவிலக்கம், நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விவரம், ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து பொதுக்கூட்டங்கள் இடம்பெற்றனவா, அதன் பிரதிகள், கணக்கறிக்கைகள் என பல்வேறு கேள்க்விகளை உள்ளடக்கி குறித்த விண்ணப்பமானது தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.