போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பாதாள உலகத்தை இலக்காகக் கொண்டு விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(17.12.2023) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
உலக செயற்பாடுகளில் பூரண மாற்றம்
இதன்போது பொலிஸார் மற்றும் படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் அலஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி 2024 ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் பூரண மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.