Loading...
நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கட்டம்பே ராஜோபவனாராம விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Loading...
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமானதொரு எதிர்க்கட்சியை கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு எதிராகச் செயற்படுவதுடன், மக்களைப் பாதுகாப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...