பலரும் தங்கள் முகத்தை அழகாக வைத்து கொள்ளவே விரும்புவர். இதற்காக கடைகளில் கிடைக்கும் பலவித கிரீம்களையும் வாங்கி பயன்படுத்துவர். சில கிரீம்கள் சிலருக்கு வேலை செய்தாலும், பலருக்கு அத அலர்ஜியை ஏற்படுத்தி விடும்.
என்றும் இயற்கை வழியில் செல்வது அனைவருக்கும் உகந்தது. இங்கு இயற்கை வழியில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கருப்பாக இருக்கும் முகத்தை மூன்றே நாட்களில் வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதை பாருங்கள்..
4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
2 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் பால், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாட்களுக்கு 1 முறை செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும்.
ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை சிறிது எடுத்து அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள கருமை அகலும்.
மேலே குறிப்பிடபட்டவைகளை முயற்சி செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைப்பதை உணர முடியும்.