Loading...
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா தனது அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோவுக்கு மேற்கே தரையிறங்கிய நிலையில் மேற்குலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
வட கொரிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்த நிலையில் இந்த ஏவுகணை பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
Loading...
வட அமெரிக்க கண்டத்தை அடையும் வரம்பைக் கொண்ட இந்த ஏவுகணையானது 73 நிமிடங்கள் பயணித்ததாக தென் கொரிய மற்றும் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பரிசோதனையானது ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுவதாக தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
Loading...