மனித இம்யூனோகுளோபிலின் சந்தேகத்திற்குரிய தொகுதி சம்பந்தப்பட்ட விசாரணைகள் தொடர்பில், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சட்ட முத்திரையை (சீல்) வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுத் துறை, இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் கைப்பற்றியது.
வாக்குமூலங்களை வழங்க அழைப்பு
கைப்பற்றப்பட்ட கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்த சட்டமா அதிபர் திணைக்களம், வாக்குமூலங்களை வழங்குவதற்காக சமன் ரத்நாயக்க அழைக்கப்படவுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருடைய அலுவலகத்திற்கும் சட்டமுத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளது.