நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் பிரதிநிதியும் இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி தீவிர செயற்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் தனது அதிஷ்டத்தின் காரணம் W-O-R-K, அதாவது தான் செய்யும் வேலையில் தான் வெற்றி இருப்பதாக ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
16 மணி நேரம் பணியாற்றும் விவேக் ராமசாமி
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களைவிட மும்முறமாக மக்களை சந்தித்து வரும் அவர், கடந்த ஆறு நாட்களில் 42 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
அடுத்த வாரம் 38 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ள விவேக் ராமசாமி, நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் பணியாற்றுவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.