Loading...
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.12.2023) வடமராட்சி – துன்னாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
Loading...
பொலிஸாரால் கைது
51 வயதான குறித்த பெண் தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து ஆறு கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நாளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Loading...