தலங்கம பிரதேசத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் தனது 96 பிறந்த நாளைக் கொண்டாடிய பின்னர் உயிலரிழந்துள்ளார்.
காயமடைந்த சிகிச்சை பெற்ற குறித்த தாயார்7 நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலவத்துகொட உத்துவான்கந்த வீதியில் வசிக்கும் 8 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி மோதி விபத்து
உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, மேலதிக சிகிச்சைக்காக தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சத்திரசிகிச்சையின் பின்னர் சற்று குணமடைந்து வீடு திரும்பும் வேளையில் 96 பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.