தென் சீனாவிலுள்ள சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால், அதிகப்படியான இழப்பீடை வாங்குவதற்காக கிராமத்தில் வாழும் 160 இற்கும் மேற்பட்ட தம்பதியினர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின், ஜியாங்பே கிராமத்தை அந்நாட்டு அரசு உயர் தொழில்நுட்ப வலயமாக மாற்றுவதற்கு முடிவுசெய்துள்ளதால், அங்குள்ள 160 வீடுகள் இடிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் கிராமத்திலுள்ள தம்பதியினர் விவாகரத்து செய்து தனியாக வாழ்வதாகத் தெரிவித்தால், அவர்களுக்கு இரண்டு புதிய வீடுகள் கிடைக்கும். அத்தோடு ஒரு குடும்பத்திற்கு மேலதிகமாக 19 டொலர்கள் கிடைக்கும் என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.
மேலும் குறித்த கிராமத்திலுள்ள சில தம்பதியினர், 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள். அத்தோடு அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்துஇ ஒன்றாக வாழவே முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.