வழக்கறிஞர் வேலாயுதம் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறையிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: சசிகலாவுடன் டிடிவி தினகரன் 4 மணி நேரம் பேசினாரா?
பதில்: 35 முதல் 40 நிமிடங்கள் வரை சசிகலாவிடம் தினகரன் பேசினார்.
கேள்வி: இதுபோன்ற வசதிகள் எல்லா கைதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றனவா?
பதில்: கர்நாடக சிறைச்சாலை விதிகள் இதற்கு அனுமதி வழங்குகிறது.
கேள்வி:தினகரனின் சந்திப்பிற்கு பிறகு, சசிகலாவிற்கு கட்டல் மெத்தை, டிவி, ரேடியோ, காற்றாடி, ஏ.சி, வாட்டர் ஹீட்டர், தனி குளியலறை ஆகிய வசதிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா?
பதில்: டிவியைத் தவிர வேறு எந்த வசதியும் வழங்கப்படவில்லை. இந்த சிறையில் அதுபோன்ற வசதிகள் இல்லை.( அதற்கு அனுமதி இல்லை)
கேள்வி: சசிகலாவையும், இளவரசியையும், தமிழக சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: அது போன்ற கோரிக்கைகள் கைதிகளிடம் ( சசிகலா, இளவரசி) இருந்து எங்களுக்கு வரவில்லை.
பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது முகநூலில் இந்த தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அதனை தழுவி இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது.