Loading...
பண்டிகை காலத்தை முன்னிட்டு செயற்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் 100 மேலதிக பேருந்துகள் நீண்ட தூர சேவைகளுக்காகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் ரயில் சேவைகள் இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை விசேட கால அட்டவணையின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Loading...