தமிழீழ விடுதலைப்புலிகள் 2005 ம் ஆண்டு “ரணிலை நம்பவேண்டாம்” என தெரிவித்த விடயம் தற்போது நிருபனமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.
மேலும், இந்த உண்மையை விடுதலைப்புலிகள் சொன்ன போது மக்கள் தமிழர் ஆய்வாளர்கள் குழம்பினர். ஆனால் அன்று தீர்க்கதரிசனமாக புலிகள் தெரிவித்ததை இன்று ரணில் விக்ரமசிங்க அவருடைய செயற்பாடுகளால் நிருபித்துள்ளார் என கூறியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்கம் தொடர்பான பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்த்து ஏனைய தமிழ்கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தீர்வு நல்லிணக்கம் தொடர்பான சந்தித்து பேசினார்.
இந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பதாகவே சர்வதேச சமூக்திற்கு இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதன் முன்போன பெப்ரவரி சுதந்திர தினத்தின் முன்னர் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையிலே அமையவேண்டும் என பேச்சுவார்த்தையின் முதல் சுற்று ஆரம்பித்தது.
அதன் பின்னணியில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலே ஊடகங்கள் வெளியிட்டு தலையங்கள் நாடாளுமன்ற தேர்தலின் பின்பு அரசியல் தீர்வு 13ஆம் திருத்தத்தை முழுமையக நடைமுறைப்படுத்துங்கள் என் கோரியுள்ளதாக தலையங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டுவருகின்ற வகையில் அமைந்திருந்தன.
அனைத்தும் ஒரு நாடகம்
முதலாவது இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ரணிலால் ஆரம்பிக்கபட்ட பொழுதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொன்னது.
இது அனைத்தும் ஒரு நாடகம். இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் சர்வதேச நாடுகளில் அரசு பிச்சை கேட்கின்ற நிலை காணப்படுகிறது.
இலங்கையின், பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணமே இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லாமல் ஒரு யுத்தத்திற்கு சென்று யுத்தத்தை நடாத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள்தான்” என்றார்.