Loading...
யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும்தெரிவிக்கையில், ”வேலணை பிரதேச செயலர் பிரிவில் 07.04 ஏக்கரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 3.325 ஏக்கரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் , 18.75 ஏக்கரும் , பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 17 ஏக்கர் நெல் செய்கை பாதிக்கப்பட்டுள்ளன.
Loading...
அதேவேளை யாழ். மாவட்டத்தில் 9.125 ஏக்கர் மரக்கறி செய்கையும் அழிவடைந்துள்ளன. அதில் அதிக பட்சமாக சங்கானை பிரதேச செயலர் பிரிவில் , 08.875 ஏக்கர் அழிவடைந்துள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...