மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பெருந்தொகையான பெரிய வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை ஆரம்பம்
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆரம்பித்துள்ள விசாரணைகளைகளின் போதே இந்த தனியார் களஞ்சியசாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.