Loading...
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடியே 80 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணை நேற்று (22.12.2023) டுபாயில் இருந்து 5 கிலோ 500 கிராம் எடையுள்ள 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் சுங்க பிரிவினர் கைது செய்தனர்.
Loading...
செலுத்தப்பட்ட அபராதம்
மேலும், அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்ய சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 11 கோடியே 80 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பெண் அபராதத்தை செலுத்தியதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...