உலகம் முழுவதும் பல நாடுகளில் பதிவாகியுள்ள JN.1 புதிய வகை கோவிட் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மாறுபாடு இலங்கையில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத பின்னணியில், தற்போதைய உலகளாவிய நிலைமையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் நிபுணத்துவ மருத்துவக் குழு தீர்மானிக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கோவிட்
எவ்வாறாயினும், புதிய கோவிட் வகைக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கும் தடுப்பூசிகளுக்கு பதிலளிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் கூறினார்.
நாட்டில் சுவாசத்துடன் தொடர்புடைய நோய்கள் அதிகரித்து வருகின்றன. கர்ப்பிணித் தாய்மார்கள், நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயோதிபர்கள், குழந்தைகள் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.