மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா கணுக்கள் உபாதை காரணமாக 2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாது போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி (15.12.2023) ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு
கடந்த இரு ஐ.பி.எல் தொடர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக சிறப்பாக செயற்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா ட்ரேட் முறையின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நீண்டகாலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து வெளியாகியுள்ள இந்த செய்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.