இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவரது உடலில் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் அமைந்திருக்கும்.
இதனை முனிவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் ஒருவரின் உடலில் மச்சம் இருக்கும் இடத்தைக் கொண்டு தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.
இப்போது நம் உடலில் மச்சம் எங்கெங்கு இருந்தால் என்னென்ன பலன் என்பதை வரிசையாக பார்க்கலாம்.
நெற்றி பகுதி
ஒருவருக்கு நெற்றியின் மையப் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் வாழ்வில் எந்த வித பணக் கஷ்டமும் ஏற்படாமல் போதுமான அளவில் பணம் எந்நேரமும் இருக்கும்.
வலது கண்ணம்
ஒருவரது வலது கண்ணத்தில் மச்சம் இருக்குமாயின், அவர் திருமணத்திற்கு பின்னர் மிகுந்த செல்வந்தராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
காது
ஒருவரின் கன்னம் மற்றும் காது இணையும் பகுதியில், அதுவும் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அந்த நபர் இளமையிலேயே செல்வந்தராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம்.
உதடு
உதட்டின் கிழ் உதடின் மேல் மச்சம் இருந்தால் அந்த நபர் எதையும் சுலபமாக கையாளும் திறமையும், கை யில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும் என்பதையும் குறிக்கும்.
மூக்கு
மூக்கின் நுனி அல்லது வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது அந்த நபர் கட்டாயம் ஒரு நாள் செல்வந்தராவார் என்பதைக் குறிக்கும்.
மேலும், இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள், எதிலும் வெற்றியையும், 30 வயதிற்குள் வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதையும் குறிக்கிறது.
ஆனால், முக்கியமான ஒன்றாக இது அனைத்தும் திருமணத்திற்கு பின் நடக்கும் என்பதையும் குறிக்கிறது.
உள்ளங்கை
ஒருவரின் வலது உள்ளங்கையின் மேல் பகுதியில் மச்சம் இருப்பது அவரை மேல் இளமையிலேயே செல்வந்தர்களாகும் ஒரு வேளை உள்ளங்கையின் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு போராடி வெற்றியையும், செல்வத்தையும் கட்டாயம் பெறுவார்கள் என்பதையும் குறிக்கிறது.
இடுப்பு
இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் இருப்பார்கள்.
தாடை
தாடையில் மச்சம் இருப்பவர்கள், மிகுந்த பாக்கியசாலிகளாவர்.
இவர்கள் தனிமையையே விரும்புவார்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்டமாட்டார்கள்.
அப்படி இல்லையானால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டும் தான் நெருங்கி இருக்க விரும்புவார்கள்.
தொப்புள்
தொப்புளின் கீழே வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அதுவும் ஒருவர் செல்வந்தவர்களாக வாழக் கூடியவர்கள் என்பதைக் குறிக்கிறது.
மார்பு
மார்பு பகுதியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது அந்த நபர் அமைதியான வாழ்க்கையை வாழ்வதோடு, செல்வ செழிப்போடும் இருப்பார்களாம்.
உள்ளங்கால்
ஒருவருக்கு உள்ளங்காலில் மச்சம் இருந்தால், அவர்கள் தொலை தூர பயணத்தை விரும்புபவர்களாகவும், உலகம் முழுவதையும் சுற்றி பார்க்கும் வாய்ப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
இவ்வாறு பணடைய கால முனிவர்கள் இந்து சாஸ்திரத்தில் கணித்து வைத்துள்ளனர்.