அடுத்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலலசேகர மாவத்தையிலுள்ள நாமல் ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி வேட்பாளர்
இதன்போது பொதுஜன பெரமுனு ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயர் முன்வைக்கப்பட்டமை குறித்து விவாதிக்கப்பட்டது.
தம்மிக பெரேரா ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
“முதலில் கட்சியை உருவாக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு அல்ல எந்த தேர்தலுக்கும் வருவதற்கு கட்சி தயாராக உள்ளது. ஏனெனில் நான் சவால்களை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் என நாமல் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எமது கட்சியின் சார்பில் நான்கு வேட்பாளர்கள் உள்ளனர். நானும் பசில் ராஜபக்ஷவும் விண்ணப்பிக்க தீர்மானித்தால் ஆறு பேர் போட்டியிடுவார்கள் என நாமல் கூறியுள்ளார்.