நாம் அனைவருமே நமது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவோம் அல்லவா?
அதற்கு இயற்கையான உணவுகள் தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. அவை தரும் போஷாக்கினால், சரும பாதிப்புகள் தடுக்கப்பட்டு சருமம் பொலிவு பெறும்.
தயிர்
தயிரில் புரதச்சத்து, கால்சியம், விட்டமின்கள் மற்றும் ப்ரோபயாடிக் ஆகிய சத்துக்கள் அதிகமாக நிறைந்தவை. எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நமது சருமத்தின் வலி, அலர்ஜி மற்றும் தடிப்புகள் காரணமாக ஏற்படும் வீக்கத்தை சரி செய்கிறது.
தயிரில் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருப்பதால், இவை நமது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, தோல் வறட்சி அடையாமல் பாதுகாக்கிறது.
மாதுளை
மாதுளையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக உள்ளதால், இவை வயதாகும் போது தோல்களில் ஏற்படும் மாற்றங்களை மாற்றும் தன்மையும் கொண்டுள்ளது. மேலும் இது சூரிய ஒளியின் காரணமாக தோலில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது.
மாதுளை விதையில் இருந்து பெறப்படும் எண்ணெய் தோலில் சுருக்கங்கள் மற்றும் சேதங்கள் அடையாமல் தடுத்து, சருமத்தின் மென்மையாக பாதுகாத்து என்றும் இளமையாக இருக்க உதவுகிறது.
வால்நட்ஸ்
வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வருவதால், அது நமது சருமத்தின் அழகினை மேம்படுத்துகிறது. ஏன்னெல் இதில் ஒமேகா-3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இவை நமது தோலிற்கு ஈரப்பதம் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து, சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் பாதுகாக்க உதவுகிறது.
குடைமிளகாய்
குடைமிளகாயில் உள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நமது சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுப்பதுடன், தோல்களுக்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்தாமல், தோல்களை அழகாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.
துளசி
காய்ச்சலில் இருந்து ஆபத்தான பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகிய தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கும் துளசி சரும பொலிவிற்கும் உதவுகிறது.
தினமும் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால், அது நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனையை தடுப்பதுடன், சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, தோலின் பளபளப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதையில் விட்டமின் E அதிகம் உள்ளது. எனவே இது நமது தோலில் செல்களில் நச்சு தன்மையை நீக்கி தோலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, சரும பொலிவினை தருகிறது.
மேலும் இந்த விதையை தினமும் சாப்பிட்டால், சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் சரும சேதத்தினை தடுத்து, சருமத்தை என்றும் இளமையாகவும், அழகாகவும் பாதுகாக்க உதவுகிறது.