Loading...
2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு 17 ஆவது ஐ.பி.எல் தொடர் இடம்பெறவுள்ளது.
இதன்படி, குறித்த தொடருக்கான வீரர்களது ஏலம் கடந்த 19 ஆம் திகதி டுபாயில் இடம்பெற்றது.
Loading...
இதன்போது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...