நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 16 கைதிகள் நாளையதினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
குறித்த விடயத்தை சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி. திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் 1004 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறு குற்றங்கள்
ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 பேரும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.